செய்திகள்
கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்ற காட்சி.

உ.பி. பாலியல் வன்கொடுமை - ஆளுநர் மாளிகை நோக்கி திமுக மகளிரணி பேரணி

Published On 2020-10-05 12:53 GMT   |   Update On 2020-10-05 12:53 GMT
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணுக்காக நீதிக்கேட்டு கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி மெழுகுவர்த்தி ஏந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர்.
சென்னை:

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற, கடந்த சில தினங்களுக்கு ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றனர். அங்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ராகுல்காந்தியை போலீசார் தடுத்தனர்.

இந்த சம்பவத்தில் ராகுல் காந்தி நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். பின்பு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, விதிகளை மீறியதாக அவர்களை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர். 

இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணுக்காக நீதிக்கேட்டு இன்று கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி மெழுகுவர்த்தி ஏந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர்.
Tags:    

Similar News