செய்திகள்
அமைச்சர் தங்கமணி

முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்வதில் அ.தி.மு.க.வில் குழப்பம் இல்லை- அமைச்சர் தங்கமணி பேட்டி

Published On 2020-10-03 20:55 GMT   |   Update On 2020-10-03 20:55 GMT
அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்வதில் குழப்பம் இல்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல்:

சென்னையில் நடந்த அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் வருகிற 7-ந் தேதி முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இதனிடையே அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிரடியாக கூறினார். இதனால் கட்சியினரிடையே குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணியிடம், அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டு உள்ளதா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் தங்கமணி ‘அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வதில் எந்த குழப்பமும் இல்லை’ என பதில் அளித்தார்.
Tags:    

Similar News