செய்திகள்
கோப்புபடம்

தர்மபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-01 13:38 GMT   |   Update On 2020-10-01 13:38 GMT
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தர்மபுரி:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட பொருளாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் காவேரி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கிராமப்புற நூலகர்கள், தொகுப்பூதிய செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News