செய்திகள்
ரெயில்

நெல்லை, செங்கோட்டை, மதுரை, ராமேசுவரத்துக்கு சிறப்பு ரெயில்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2020-10-01 02:54 GMT   |   Update On 2020-10-01 02:54 GMT
சென்னையில் இருந்து நாளை முதல் நெல்லை, செங்கோட்டை, மதுரை, ராமேசுவரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:

கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. பொது மக்களின் வசதிக்காக தமிழக அரசு வேண்டுகோள் விடுத்ததின் பேரில் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் தமிழகத்தில் 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதில் நெல்லை செல்வதற்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டும் இயக்கப்படுகிறது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் தங்கள் பகுதிகளுக்கும் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அந்த வகையில் தற்போது நெல்லை, செங்கோட்டை, மதுரை, ராமேசுவரத்துக்கு முழுவதும் முன்பதிவு இருக்கைகளுடன் கூடிய சிறப்பு ரெயில்களை இயக்க, தெற்கு ரெயில்வேக்கு ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* நெல்லை-சென்னை எழும்பூர் (வண்டி எண்: 02632) இடையே சிறப்பு ரெயில் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.35 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக எழும்பூர்-நெல்லை (02631) இடையே சிறப்பு ரெயில் வருகிற 5-ந் தேதி முதல் இரவு 7.50 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.

* எழும்பூர்-செங்கோட்டை (02661) இடையே சிறப்பு ரெயில் வருகிற 3-ந் தேதி (நாளை மறுதினம்) இரவு 8.40 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக செங்கோட்டை-எழும்பூர் (02662) இடையே சிறப்பு ரெயில் வருகிற 4-ந் தேதி முதல் மாலை 6.10 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையத்தில் புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையம் வந்தடையும்.

* எழும்பூர்-மதுரை (02613) இடையே தேஜஸ் சிறப்பு ரெயில் நாளை முதல் வியாழக்கிழமை தவிர்த்து காலை 6 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கமாக மதுரை- எழும்பூர் (02614) இடையே தேஜஸ் சிறப்பு ரெயில் மதியம் 3 மணிக்கு மதுரை ரெயில் நிலையத்தில் புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

* ராமேசுவரம்- எழும்பூர் (02206) இடையே சிறப்பு ரெயில் 2-ந் தேதி (நாளை) முதல் இரவு 8.25 மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக எழும்பூர்- ராமேசுவரம் (02205) இடையே சிறப்பு ரெயில் வருகிற 5-ந் தேதி முதல் மாலை 5.45 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4.25 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.

* எழும்பூர்-கொல்லம் (06723) இடையே சிறப்பு ரெயில் வருகிற 3-ந் தேதி முதல் இரவு 8.10 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 1.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லம்-எழும்பூர் (06724) இடையே சிறப்பு ரெயில் வருகிற 4-ந் தேதி முதல் கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.10 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையம் வந்தடையும்.

* எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-ஆலப்புழா (02639) இடையே சிறப்பு ரெயில் 2-ந் தேதி (நாளை) முதல் இரவு 8.55 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு ஆலப்புழா சென்றடையும். மறுமார்க்கமாக ஆலப்புழா-எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (02640) இடையே சிறப்பு ரெயில் வருகிற 3-ந் தேதி முதல் மாலை 4.05 மணிக்கு ஆலப்புழா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.50 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடையும்.

* எர்ணாகுளம்-காரைக்கால் (06188) இடையே சிறப்பு ரெயில் வருகிற 3-ந் தேதி முதல் இரவு 10.30 மணிக்கு எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் மதியம் 12.10 மணிக்கு காரைக்கால் சென்றடையும். மறுமார்க்கமாக காரைக்கால்-எர்ணாகுளம் (06187) இடையே சிறப்பு ரெயில் வருகிற 4-ந் தேதி முதல் மாலை 4.20 மணிக்கு காரைக்கால் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) முதல் காலை 8 மணியில் இருந்து டிக்கெட் கவுண்ட்டர்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News