செய்திகள்
முக ஸ்டாலின்

ராமகோபாலன் மறைவு- முக ஸ்டாலின் இரங்கல்

Published On 2020-09-30 13:09 GMT   |   Update On 2020-09-30 13:09 GMT
இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெவித்துள்ளார்.
சென்னை:

இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ராமகோபாலன் (94), உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,

சித்தாந்த வேறுபாடுகள் இருந்தாலும் கருணாநிதியும், ராமகோபாலனும் நல்ல நண்பர்களே. கருணாநிதி, ராமகோபாலனின் நட்புணர்வில் கொள்கைச் சுதந்திரம் என்றைக்குமே குறுக்கிட்டதில்லை. ஆழ்ந்த ஆன்மீகச் சிந்தனையுடன் , சமயக் கருத்துகளை சமுதாயத்திற்கு எடுத்துரைத்த துறவியின் மறைவு பேரிழப்பு என கூறியுள்ளார்.

இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ராமகோபாலன் மறைவுக்கு தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News