செய்திகள்
ஆரல்வாய்மொழி அருகே நாற்கர சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை காணலாம்

ஆரல்வாய்மொழி அருகே புதிய நாற்கர சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்

Published On 2020-09-30 09:52 GMT   |   Update On 2020-09-30 09:52 GMT
ஆரல்வாய்மொழி அருகே புதிய நாற்கர சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரல்வாய்மொழி:

காவல்கிணறு முதல் நாகர்கோவில் வரையிலான புதிய நாற்கர சாலை பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை வழியாக மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்தநிலையில் நாற்கர சாலையில் முப்பந்தல் அருகே உள்ள கண்ணு பொத்தை பக்கம் திடீரென்று பெரிய பள்ளம் விழுந்தது. அவ்வழியே 3 பேர் சென்ற மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் இறங்கிய போது, அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து, காயம் அடைந்தனர். அவர்களை அருகில் உள்ள காற்றாலை ஊழியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அந்த பள்ளத்தை சுற்றிலும் மரக்கிளைகளால் தடுப்பு ஏற்படுத்தினர்.

புதிய நாற்கர சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து பள்ளத்தை சீர் செய்வதுடன், வேறு எங்காவது இது போல் பள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.

ஏனெனில் சாலை திறப்பதற்கு முன்பே இந்த நிலை என்றால், சாலை திறந்து வாகனங்கள் அனைத்தும் செல்லும் போது பெரிய பள்ளங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News