செய்திகள்
கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் தொடங்கி வைத்த காட்சி.

சிரிப்பு நடிகர்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2020-09-30 09:39 GMT   |   Update On 2020-09-30 09:39 GMT
திருப்பத்தூர் நகராட்சி சார்பில் சிரிப்பு நடிகர்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த சினிமா சிரிப்பு நடிகர்கள் கிங்காங், முத்துக்காளை, மார்த்தாண்டம் ஆகியோரை கொண்டு விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது ஊரடங்கு தளர்வு காரணமாக தற்போது அனைத்து பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருகை தருகிறார்கள். அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணியவேண்டும். சானிட்டரி பயன்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து சிரிப்பு நடிகர்கள் நகைக்கடை பஜார், கோட்டை தெரு, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வடிவேலு காமெடி பாணியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், துப்புரவு அலுவலர் ராஜரத்தினம், ஆய்வாளர் விவேக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News