செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தொற்று அதிகரிப்பு- சிங்களாந்தபுரத்தில் முழுஊரடங்கு அமல்

Published On 2020-09-30 08:57 GMT   |   Update On 2020-09-30 08:57 GMT
கொரோனா தொற்று அதிகரிப்பால் சிங்களாந்தபுரம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளனர்.
ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரம் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் தொற்று பரவலாக இருந்து வருகிறது. ஊராட்சி சார்பில் தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனிடையே கொரோனா காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த கிராமத்தை சேர்ந்த 2 பேர் இறந்தனர். மேலும் அந்த கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் 15-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.

இந்தநிலையில் கொரோனா மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் சிங்களாந்தபுரம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளனர். அதையொட்டி ஓட்டல்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்பட 150-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.

இதனால் அங்கு முக்கிய தெருக்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் ஒரு வார காலத்திற்கு கடைகளை மூடுவதற்கு முடிவு செய்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News