செய்திகள்
முக ஸ்டாலின்

மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா இல்லை- பரிசோதனை முடிவில் தகவல்

Published On 2020-09-30 04:41 GMT   |   Update On 2020-09-30 04:41 GMT
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா இல்லை என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.
சென்னை:

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்புக்கு ஆளாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். அக்கட்சி எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியனுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தனிமை படுத்திக்கொள்ளும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினேஷ் குண்டுராவ் அண்ணா அறிவாலயம் வந்திருந்தபோது அவரை வரவேற்று அழைத்துச்சென்ற தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் உள்பட 12 தி.மு.க. நிர்வாகிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

அடுத்தகட்டமாக நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் நேற்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.

இந்நிலையில் நேற்று எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா இல்லை என தெரிய வந்தது.
Tags:    

Similar News