செய்திகள்
ராமதாஸ்

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் அதிக இடம் கிடைப்பதை உறுதி செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2020-09-30 03:34 GMT   |   Update On 2020-09-30 03:34 GMT
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் அதிக இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் மருத்துவ கல்வி கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ள போதிலும், அதன் பயன்களை தமிழ்நாட்டு மாணவர்கள் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. தனியார் மருத்துவ கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் பெரும்பாலானவை பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை கொண்டு நிரப்பப்படுவது தான் இதற்கு காரணம் ஆகும்.

எனவே, தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரி இடங்கள், தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை எவ்வாறு முழுக்க, முழுக்க தமிழ்நாட்டு மாணவர்களை கொண்டு நிரப்பப்படுகின்றனவோ?, அதேபோல், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் உள்ளூர் மாணவர்களை கொண்டே நிரப்பும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

இதேபோல், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையையும் தமிழக அரசு நடத்தும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலமாகவே மேற்கொள்ளும் வகையில் விதிகளை திருத்த வேண்டும். இதன் மூலம் மருத்துவ கல்லூரியின் தரத்தை உயர்த்துவது மட்டுமின்றி, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் அதிக இடம் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News