செய்திகள்
வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீது 4 பிரிவுகளில் வழக்கு

Published On 2020-09-30 02:36 GMT   |   Update On 2020-09-30 02:36 GMT
வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை:

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், சென்னை பெருங்குடி கந்தன்சாவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் வாகை சந்திரசேகர், அரவிந்த் ரமேஷ் உள்பட 200 பேர் மீது துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதில், சட்ட விரோதமாக கூடுதல், அனுமதியின்றி போராட்டம் நடத்துதல், தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டம் மற்றும் சென்னை பெருநகர காவல் சட்டம் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் ஆதம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. பீமாராவ், தி.மு.க. நிர்வாகிகள் என்.சந்திரன், குணாளன், கோல்டுபிரகாஷ் உள்பட 150 பேர் மீது ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Tags:    

Similar News