செய்திகள்
வழக்கு பதிவு

காங்கேயத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,900 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு

Published On 2020-09-29 14:56 GMT   |   Update On 2020-09-29 14:56 GMT
காங்கேயத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,900 வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
காங்கேயம்:

காங்கேயத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் நகரில் நடத்திய வாகன சோதனையில் குடிபோதையிலும், தலைக்கவசம் அணியாமலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், சீருடை அணியாமல், செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தில் செல்வது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது, முக கவசம் இல்லாமல் இருப்பது உள்பட, பல்வேறு விதிகளை மீறியதாக, 2ஆயிரத்து 900 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 92 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டுள்ளதாக காங்கேயம் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News