செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

நாகர்கோவிலில் வங்கி - பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

Published On 2020-09-29 10:08 GMT   |   Update On 2020-09-29 10:08 GMT
நாகர்கோவிலில் வங்கி மற்றும் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, வங்கி மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்தநிலையில் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றும் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து அவர் பரிசோதனை செய்து கொண்டார். அதன் முடிவு நேற்று வெளியானது.

அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பகவதிபெருமாள் தலைமையில் நேற்று மாநகராட்சி பணியாளர்கள் அந்த வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளித்து, சுத்தப்படுத்தினர். பின்னர் அந்த வங்கி மூடப்பட்டது. மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட ஊழியருடன் பணியாற்றிய 15 பேருக்கும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

இதேபோல் நாகர்கோவில் வாட்டர்டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். ஊழியர் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று அந்த அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து மூடினர். பின்னர் அந்த அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
Tags:    

Similar News