செய்திகள்
கைது

கரிவலம்வந்தநல்லூர் அருகே ஆற்றில் மணல் அள்ளிய 11 பேர் கைது

Published On 2020-09-28 11:33 GMT   |   Update On 2020-09-28 11:33 GMT
கரிவலம்வந்தநல்லூர் அருகே ஆற்றில் மணல் அள்ளிய 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டிராக்டர், பொக்லைன் எந்திரம், 17 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவுக்கு உட்பட்ட கரிவலம்வந்தநல்லூர் பகுதிகளில் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங்கிற்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அவருடைய உத்தரவின்பேரில், சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்தனர்.

இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, கரிவலம்வந்தநல்லூர் நிட்சேப நதியில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கரிவலம்வந்தநல்லூர், பாஞ்சாகுளம், தெற்குமேடு, மாங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சக்திவேல், திருப்பதி, முனியாண்டி, சண்முகையா, அமிர்தராஜ், சேதுபதி, சீனி, மகேஸ்வரன், சின்ன கிருஷ்ணன், மாடசாமி, மணிகண்டன் ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து டிராக்டர், பொக்லைன் எந்திரம், 17 டிப்பர் லாரிகள், செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News