செய்திகள்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

“தமிழ் பத்திரிகை வரலாற்றின் புரட்சியாளர் சி.பா.ஆதித்தனார்” - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாரம்

Published On 2020-09-27 06:05 GMT   |   Update On 2020-09-27 06:05 GMT
சி.பா.ஆதித்தனார் அவர்கள் தமிழ் பத்திரிகை வரலாற்றின் புரட்சியாளர் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை:

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு முதல், சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு தமிழ் அறிஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று சென்னை எழும்பூரில் சி.பா.ஆதித்தனார் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன், பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மாலை முரசு நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் சி.பா.ஆதித்தனார் ஆற்றிய சேவைகளை எண்ணி பெருமை கொள்வதாக புகழாரம் சூட்டியுள்ளார். “நாட்டு நடப்பை பாமரர்களுக்கும் கொண்டு சென்ற தமிழ் பத்திரிகை வரலாற்றின் புரட்சியாளர், தினத்தந்தி நிறுவனர், பன்முகத் தன்மை கொண்ட தமிழ்ப்பற்றாளர், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளான இன்று தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் அவர் ஆற்றிய சேவைகளை எண்ணி பெருமை கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News