செய்திகள்
கொரோனா வைரஸ்

நெல்லை, தூத்துக்குடியில் 139 பேருக்கு கொரோனா

Published On 2020-09-26 23:34 GMT   |   Update On 2020-09-26 23:34 GMT
நெல்லை, தூத்துக்குடியில் 139 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தென்காசியில் ஒருவர் பலியானார்.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று நெல்லை அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அதிகாரி, அவருடைய கணவர் மற்றும் அணுமின் நிலைய ஊழியர்கள் 10 பேர் உள்பட 90 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் பணியாற்றிய இடத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அவர்களுடன் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நேற்று ஒரே நாளில் 109 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை அரசு, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 11 ஆயிரத்து 264 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 890 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 196 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் இறந்து உள்ளார். மாவட்டத்தில் இதுவரை 7ஆயிரத்து 137 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 6 ஆயிரத்து 487 பேர் வீடு திரும்பி உள்ளனர். 517 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 133 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் கொரோனா பரவல் வேகம் கட்டுப்பாட்டுக்குள் வந்து உள்ளது. நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 214 ஆக உயர்ந்தது. இதுவரை 12 ஆயிரத்து 461 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். 632 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News