செய்திகள்
வீடியோ செய்தி

பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலையில் திடீர் பின்னடைவு உள்பட முக்கிய செய்திகள் வீடியோ தொகுப்பாக..

Published On 2020-09-24 15:28 GMT   |   Update On 2020-09-24 15:28 GMT
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா, கோவா சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு உள்பட முக்கிய செய்திகள் வீடியோ தொகுப்பாக..
கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைப்பு
   
கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கலவர வழக்கு- காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு
   
டெல்லி கலவர வழக்கு தொடர்பாக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய குற்றப்பத்திரிகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் பெயர் இடம்பெற்றுள்ளது.

வேளாண் மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு- பினராயி விஜயன் பேட்டி
   
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா- மணிமண்டபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை
   
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழாவையொட்டி, திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு
   
தமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு மாணவர்கள் வரலாம் என்று தெரிவித்துள்ளது.

மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி 29ம் தேதி ஆலோசனை
   
தலைமைச் செயலகத்தில் வரும் 29-ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார்- பிரேமலதா
   
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார், விரைவில் வீடு திரும்புவார் என்று பிரேமலதா கூறியுள்ளார்.

தமிழ் பள்ளி மூடப்பட்டதற்கு எதிர்ப்பு- குஜராத் முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்
   
குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் சங்க தேர்தல் வழக்கை விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு
   
நடிகர் சங்க தேர்தல் வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
   
சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவுக்கு மேலும் 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

நேபாளம் - கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி
   
நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது - சீன வைராலஜி நிபுணர்
   
கொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியதாக, சீனா வைராலஜி நிபுணர் லீ மெங் யான் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்
   
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தலைசிறந்த வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ஐ.பி.எல்.லில் 200-வது சிக்சர் - இந்திய வீரர்களில் ரோகித் 2-வது இடம்
   
கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 6 சிக்சர் அடித்ததன் மூலம் ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டியில் 200 சிக்சர்களை எடுத்து முத்திரை பதித்தார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்... மருத்துவமனை அறிக்கை
   
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News