செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கிண்டி ஆய்வகத்தில் மட்டும் 4 லட்சம் கொரோனா பரிசோதனைகள்

Published On 2020-09-24 02:44 GMT   |   Update On 2020-09-24 02:44 GMT
கிண்டி கிங் ஆய்வகத்தில் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
சென்னை:

தமிழகத்தில் 176 கொரோனா ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 66 அரசு மருத்துவமனைகளிலும், 110 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களிலும் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு இதுவரை 67 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. சென்னையில் மட்டும் பரிசோதனைகளின் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்துள்ளது.

அதில், அதிக அளவிலான பரிசோதனைகள் கிண்டி கிங் ஆய்வகத்திலும் அதற்கு அடுத்தபடியாக, ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இது குறித்து கிண்டி கிங் ஆய்வக டாக்டர்கள் கூறியதாவது:-

தமிழகத்தில் தினமும் 1 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ள சுகாதாரத் துறை இலக்கு நிர்ணயித்து உள்ளது. அதற்காக அரசு மற்றும் தனியாரில் ஆய்வகங்களில் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிண்டி கிங் ஆய்வகத்தில் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News