செய்திகள்
தட்டார்மடம் வியாபாரி செல்வன்

தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

Published On 2020-09-23 10:51 GMT   |   Update On 2020-09-23 10:51 GMT
தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை திசையன்விளை போலீசார் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பை சேர்ந்தவர் செல்வன் (32). இவர் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார். நிலத்தகராறு காரணமாக கடந்த 17-ம் தேதி இவர் காரில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
 
இந்த கொலை தொடர்பாக தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க. வர்த்தக அணியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் திருமணவேல் ஆகியோர் உள்பட சிலர் மீது நெல்லை மாவட்டம் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருமணவேல் உள்பட 2 பேர் சென்னை கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே, இந்த கொலை வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி போலீஸ் டிஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார். இதையடுத்து வியாபாரி கொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இன்று திசையன்விளை போலீசார் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News