செய்திகள்
ஆன்லைன் வகுப்பு

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தொடக்கம்: ஆன்லைன் வகுப்பு நடத்தினால் நடவடிக்கை

Published On 2020-09-21 14:25 GMT   |   Update On 2020-09-21 14:25 GMT
1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘இன்று முதல் செப்டம்பர் 25-ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’  என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News