செய்திகள்
கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

கோவை சிறைக்காவலர்கள் 2 பேருக்கு கொரோனா - கைதிகளுக்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை

Published On 2020-09-21 02:40 GMT   |   Update On 2020-09-21 02:40 GMT
கோவை சிறைக்காவலர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்று திரும்பினார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானது.
கோவை:

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமாக கைதிகள் உள்ளனர். இவர்களை கண்காணிக்க சிறைக்காவலர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு சிறைக்காவலர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்று திரும்பினார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானது. எனவே அவர், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 இது போல் கொரோனா உறுதியான மற்றொரு சிறைக்காவலருக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற காவலர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. கோவை சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா பரவாமல் தடுக்க தினசரி காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவி மூலம் கைதிகளின் ஆக்சிஜன் அளவு சரிபார்க்கப்படுகிறது. காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு இருப்பவர்களுக்கு சிறை டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்று உறுதியான பிறகே கைதிகள் சிறைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா பாதிப்புள்ள விசாரணை கைதிகள் அரசு ஆஸ்பத்திரிகளில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுப்பப்படுவார்கள் என்று சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News