செய்திகள்
திருப்பதி பிரம்மோற்சவ விழா (கோப்பு படம்)

திருப்பதி பிரம்மோற்சவ விழா முதல் திவால் சட்ட மசோதா வரை... இன்றைய முக்கிய செய்திகள்

Published On 2020-09-19 09:57 GMT   |   Update On 2020-09-19 09:57 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா பரவலால் நான்கு மாடவீதிகளில் வாகன சேவை நடக்காது.
சென்னை:

இன்றைய முக்கிய செய்திகள் வருமாறு:

திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

மாநிலங்களவையில் இன்று வங்கி திவால் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. கடனை திரும்ப செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ஒத்தி வைப்பதற்கு இந்த மசோதா வகை செய்கிறது. 

21-ம் நூற்றாண்டின் தேவையை பூர்த்தி செய்வதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் -குடியரசு தலைவர்

21-ம் நூற்றாண்டின் தேவையை பூர்த்தி செய்வதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கை இந்தியாவின் பெருமையை மீட்டெடுக்கும் என்று கூறிய அவர், கல்விக் கொள்கையை உருவாக்கிய கஸ்தூரி ரங்கன் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொது சபை கூட்டத்தின் இரண்டு அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

வரும் திங்கட்கிழமை தொடங்க ஐ.நா. பொது சபை கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.


திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்: நான்கு மாடவீதிகளில் வாகன சேவை நடக்காது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல் வாகனமான பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி எழுந்தருள்கிறார். 27ம் தேதி வரை பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகின்றன. ஆனால், கொரோனா பரவலால் நான்கு மாடவீதிகளில் வாகன சேவை நடக்காது. அனைத்து வாகனங்களிலும், உற்சவர்கள் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது- இதுவரை 42.08 லட்சம் பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 53 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 93,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 42.08 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 85,619 பேர் உயிரிழந்துள்ளனர். 

சட்டவிரோத இறக்குமதி- கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்குப்பதிவு

ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மூலம் சொந்த பயன்பாட்டிற்காக அதிகாரிகள் இறக்குமதி செய்த மதநூல்கள் மற்றும் 18000 கிலோ பேரீச்சம்பழங்கனை பெற்றதாக கேரள அரசு மீது சுங்கத்துறை 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது.

அதிமுக ஒற்றுமையுடன் தான் இருக்கிறது- அமைச்சர் உதயகுமார்

அதிமுக ஒற்றுமையுடன் இருப்பதாகவும் என்றும் ஆரோக்கிய நிலையை உருவாக்கவே ஆலோசனை நடந்தது என்றும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

ஆன்லைன் மாதிரி தேர்வு தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தம்- சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் ஆன்லைன் மாதிரி தேர்வு தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிசான் முறைகேடு: வாட்ஸ்-அப் மூலம் பொதுமக்கள் தகவல் அனுப்பலாம்- சிபிசிஐடி அறிவிப்பு

கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக பொதுமக்கள் ‘வாட்ஸ்-அப்’ மூலம் தகவல்களை அனுப்பலாம் என்றும், சரியான தகவல்கள் அனுப்புவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.

பா.ஜனதா மாநில தலைவர் எல். முருகன் மீது வழக்குப்பதிவு

கொரோனா காலத்தில் தடையை மீறி அனுமதியின்றி சாரட் வண்டியில் சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு 3 கோடியை தாண்டியது -2.23 கோடி பேர் குணமடைந்துள்ளனர்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியை தாண்டி உள்ளது. 9.5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2.23 கோடியாக உள்ளது.

பிரிட்டனில் கொரோனா இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது -பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது என்றும், புதிய கட்டுப்படுகள் விதிக்கப்படலாம் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கர்கள் அனைவருக்கும் அடுத்த ஏப்ரலில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் - டிரம்ப் நம்பிக்கை

அடுத்த ஆண்டு ஏப்ரலில் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மருந்து கிடைத்துவிடும் என எதிர்பார்ப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

துபாய்க்கு விமான சேவை வழக்கம்போல் இயங்கும்- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பயணியை ஏற்றி வந்ததால், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் 15 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் நேற்று மாலையே அந்த முடிவு மாற்றப்பட்டது. வழக்கம்போல் துபாய்க்கு விமானங்கள் இயக்கப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன.

டோனி புத்துணர்ச்சியுடன் வலுவாக இருக்கிறார்- பிளமிங்

கேப்டன் டோனி புத்துணர்ச்சியுடன் வலுவாக இருக்கிறார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் - நடிகர் சூர்யா

நீதிமன்றம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த, நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறியது. அத்துடன், விமர்சனங்கள் எல்லை மீறக்கூடாது என சூரியாவுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர். இதுபற்றி கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா, இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும், நீதித்துறையின் பெருந்தன்மையை ஏற்பதாகவும் கூறினார்.
Tags:    

Similar News