செய்திகள்
அபராதம்

மோகனூரில் சமூக இடைவெளியை பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

Published On 2020-09-19 08:12 GMT   |   Update On 2020-09-19 08:12 GMT
மோகனூர் பேரூராட்சி பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மோகனூர்:

மோகனூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் பணியாளர்கள் முககவசம் அணிந்து வேலை செய்கின்றனரா? என மோகனூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தலின்பேரில் சுகாதார ஆய்வாளர் செல்வராஜா தலைமையிலான ஆய்வாளர்கள் சங்கர், சந்திரசேகரன், பழனிசாமி, முருகையா ஆகியோர் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அதில் ஓட்டல்கள், பேக்கரிகள், மளிகை கடைகள், டீக்கடைகள் உள்ளிட்டவைகளில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.3,800 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
Tags:    

Similar News