செய்திகள்
தமிழக அரசு

அரசு ஊழியர்களின் பணியிடமாற்றம் நிறுத்தி வைப்பு- தமிழக அரசு உத்தரவு

Published On 2020-09-19 02:02 GMT   |   Update On 2020-09-19 02:02 GMT
2020-21-ம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின் பொதுவான பணியிடமாற்றம் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.சுவர்ணா, நிதித்துறை துணைச் செயலாளருக்கு (நிதிநிலை) எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2020-21-ம் ஆண்டில் பொதுவாக மேற்கொள்ளப்படும் அரசு ஊழியர்களின் பணியிடமாற்றத்தை நிறுத்தி வைக்க தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி கடந்த ஜூலை மாதம் உத்தரவிடப்பட்டது.

பொதுவான மாறுதல் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 31-ந் தேதிவரை நடைபெறுகிறது. 2020-21-ம் ஆண்டுக்கான பொதுவான பணியிடமாற்றம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

கொரோனா தொடர்பாக ஏற்பட்டுள்ள பொருளாதார சூழ்நிலையில், பணியிட மாற்றம் தொடர்பான பயணச் செலவுகளை குறைப்பதற்காக பொது இடமாற்றங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

நிர்வாக வசதிகளுக்கான பணியிட மாற்றம், பரஸ்பரமாக பணியாளர்கள் பணியிடத்தை மாற்றிக்கொள்வது ஆகியவை அனுமதிக்கப்படுகின்றன. வேண்டுகோளின் அடிப்படையிலான பணியிட மாறுதலுக்கும் ஒப்புதல் வழங்கப்படும்.

நிர்வாக வசதிக்கான இடமாறுதல்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் பரஸ்பர கருத்தின் அடிப்படையிலான இடமாற்றம், வேண்டுகோளின் அடிப்படையிலான இடமாற்றம் ஆகியவற்றுக்கு, எதிர்காலத்தில் அவர்கள் தொடர்பான நிர்வாக தேவைகள் ஏற்படும் என்ற நிலை எழாதபட்சத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News