செய்திகள்
தங்கம்

தொடர்ந்து சரிவு- தங்கம் விலை பவுனுக்கு ரூ.304 குறைந்தது

Published On 2020-09-17 08:19 GMT   |   Update On 2020-09-17 08:19 GMT
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 304 குறைந்து, பவுன் ரூ. 39 ஆயிரத்து 272-க்கு விற்கிறது.
சென்னை:

தங்கம் விலை கடந்த 3 நாட்களாக குறைந்தபடியே இருக்கிறது. நேற்று பவுன் ரூ. 39 ஆயிரத்து 576-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது.

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 304 குறைந்தது. பவுன் ரூ. 39 ஆயிரத்து 272-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ. 38 சரிந்து ரூ. 4,909 ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 1,200 குறைந்து ரூ. 69 ஆயிரத்து 800-க்கு விற்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 69.80 ஆக உள்ளது.

Tags:    

Similar News