செய்திகள்
மு.க. ஸ்டாலின்

பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

Published On 2020-09-17 08:16 GMT   |   Update On 2020-09-17 08:16 GMT
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பிரதமர் மோடி இன்று தனது 70-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, நாடு முழுவதும் பாஜகவினர் மோடியின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக தலைவர்கள், பிற கட்சித் தலைவர்கள் பலர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தமிழக எதிர்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில், 'பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகள்' எனப் பதிவிட்டுள்ளார். 
Tags:    

Similar News