செய்திகள்
காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

சட்டசபையில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியேற்றம்

Published On 2020-09-15 07:24 GMT   |   Update On 2020-09-15 07:24 GMT
நீட் விவகாரம் தொடர்பான விவாதத்தில் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
சென்னை:

தமிழக சட்டசபை கூட்டம்  கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது.

இந்த ஆண்டு மரணம் அடைந்த எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வசந்தகுமார் எம்பி உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

சட்டசபை 2வது நாளாக இன்று தொடர்ந்த நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நீட் விவகாரம் தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து,  சபாநாயகர் தனபால் உத்தரவின்பேரில் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை வெளியேற்றினர்.

நீட் வழக்கில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி ஆஜராகி வாதாடியதாக அதிமுக எம்எல்ஏ இன்பதுரை கூறினார்.

அதிமுக எம்எல்ஏவின் கருத்தை நீக்கக்கோரி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

Tags:    

Similar News