செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

நம் பிள்ளைகள் பாஸாகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம் - உதயநிதி டுவிட்

Published On 2020-09-13 14:32 GMT   |   Update On 2020-09-13 14:32 GMT
நம் பிள்ளைகள் பாஸாகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, இன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். மேலும், நீட் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தோ்வு 3,842 மையங்களில் 15.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.  தமிழகத்தில் 14 நகரங்களில் 238 தேர்வு மையங்களில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு தொடங்கிய நிலையில் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.

இந்த நிலையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது டுவிட்டர் பதிவில்,

2 மணி தேர்வுக்குக் காலை 11-க்கே வந்துவிட வேண்டும். மதிய உணவு இல்லை. தமிழ் அறிவிப்பு இல்லை. கையுறைகூட குறிப்பிட்ட நிறத்தில். வெயிலில் பெற்றோர்-கழிப்பறை வசதியில்லை. நம் பிள்ளைகள் பாஸாகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே இன்றைய நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News