செய்திகள்
மாஃபா பாண்டியராஜன்

ரஜினி கட்சி தொடங்கினால் முக ஸ்டாலின் போராட வேண்டியிருக்கும்- மாஃபா பாண்டியராஜன் கருத்து

Published On 2020-09-12 08:43 GMT   |   Update On 2020-09-12 08:43 GMT
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கே போராட வேண்டியிருக்கும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்:


திருவள்ளூரில் குடிமராமத்துப் பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்த திமுக தலைவர் ஸ்டாலின், திடீரென கூட்டத்தைப் பார்த்ததால் முதலமைச்சர் கனவு காண்கிறார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கே போராட வேண்டியிருக்கும் என கூறியுள்ளார். 
Tags:    

Similar News