செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

அரியலூர் மாணவர் விக்னேஷ் தற்கொலை - ஓ பன்னீர்செல்வம் இரங்கல்

Published On 2020-09-10 12:47 GMT   |   Update On 2020-09-10 12:47 GMT
அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட விக்னேஷ் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவா் விக்னேஷ் என்பவர் மன உளைச்சல் காரணமாக நேற்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வுக்கு தயாரான மாணவர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாணவர் விக்னேஷ் மரணத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட விக்னேஷ் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பதிவில்,

அரியலூர் - இலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் நேற்று மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். மாணவர் விக்னேஷ் அவர்களின் பிரிவால் மிகுந்த துயருற்றருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெற்றோர்கள் குழந்தைகளை தனிமையில் விடாமல் அவர்களின் விருப்பங்கள் அறிந்து உரிய அறிவுரைகள் வழங்கி அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் பார்த்துக் கொள்ளுமாறும், மாணவர்கள் துணிவுடன் எதையும் எதிர்கொள்ளும் தன்மையையும்  விடா முயற்சியையும் வளர்த்துக் கொள்ளவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News