செய்திகள்
திருமாவளவன்

நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடுக்காதது ஏன்?- திருமாவளவன்

Published On 2020-09-10 10:07 GMT   |   Update On 2020-09-10 10:07 GMT
7 மாநில அரசுகள் நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடுத்த நிலையில் தமிழக அரசு தொடுக்காதது ஏன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள செய்தியில், 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் விக்னேஷ் (19) தற்கொலை செய்து கொண்டார். விக்னேஷ் குடும்பத்திற்கு தமிழக, மத்திய அரசுகள் இணைந்து நிவாரணமாக ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும். 

7 மாநில அரசுகள் நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடுத்த நிலையில் தமிழக அரசு தொடுக்காதது ஏன் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். 

நீட் தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய முறையில் அழுத்தம் தர வேண்டும். மருத்துவரானால்தான் வாழ்க்கையில் பெரிய கவுரவம் என மாணவர்கள் கருத வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News