செய்திகள்
கோப்பு படம்

பொள்ளாச்சியில் ஆண் குழந்தை ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனை- தம்பதி உள்பட 3 பேர் கைது

Published On 2020-09-09 10:38 GMT   |   Update On 2020-09-09 10:38 GMT
பொள்ளாச்சி அருகே வறுமையால் ஆண் குழந்தை ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனை செய்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சியை சேர்ந்தவர் சுதா. இவரது கணவர் முருகவேல். மாற்றுத்திறனாளி. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4-வதாக சுதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. வேலையின்மை மற்றும் வறுமையால் குழந்தையை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து குழந்தையை தத்துக்கொடுக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில், சுதாவை அவருக்கு பழக்கமான ஆழியாறு புளியங்கண்டியை சேர்ந்த பவுலினா (41) என்பவர் அணுகி உங்கள் குழந்தையை எனக்குத் தெரிந்த தம்பதிகளுக்கு கொடுக்குமாறு கேட்டார். இதையடுத்து கடந்த 6-ந் தேதி கோகிலா மற்றும் ராஜசேகர் தம்பதியை சுதா வீட்டிற்கு பவுலினா அழைத்து வந்தார். அங்கு ரூ.80 ஆயிரம் பணத்தை கொடுத்துவிட்டு குழந்தையை பெற்றுக் கொண்டனர்.

இந்த தகவல் சைல்டு லைன் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அவர்கள் ஆழியாறு போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் குழந்தையை விற்க இடைத்தரகராக செயல்பட்ட ஆழியாறு புளியங்கண்டியை சேர்ந்த பவுலினா மற்றும் குழந்தையை வாங்கிய கோகிலா, ராஜசேகர் தம்பதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News