செய்திகள்
டாஸ்மாக் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

போளூரில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

Published On 2020-09-06 08:36 GMT   |   Update On 2020-09-06 08:36 GMT
போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
போளூர்:

போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. போளூர் இன்ஸ்பெக்டர் அருண்குமார் முன்னிலை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வரவேற்றார்.

போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் தலைமை தாங்கி பேசுகையில், டாஸ்மாக் கடைகள் முன்பு மின்விளக்கு எரிய வேண்டும். ஒவ்வொரு கடை முன்பும் சி.சி.டி.வி. கேமரா, அலாரம் பெருத்த வேண்டும். விற்பனையான தொகையை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும். எப்போதும் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். குறித்த நேரத்தில் கடை திறந்து இரவு மூட வேண்டும்’ என்றார்.

இதில் போளூர், கடலாடி, கலசபாக்கம் ஆகிய பகுதியை சேர்ந்த டாஸ்மாக் சூப்பர்வைசர்கள், விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News