செய்திகள்
கோவில்

கோவில் வாசலில் பிரியாணி கடை: கோவிலுக்கு பூட்டு போட்ட பூசாரி

Published On 2020-09-03 16:44 GMT   |   Update On 2020-09-03 16:44 GMT
சென்னை மந்தைவெளி மார்க்கெட் அருகே கோவில் வாசலில் பிரியாணி கடைக்காரர் பிரியாணி செய்து விற்பனை செய்வதால் கோவிலை பூட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் பூசாரி.
சென்னை மந்தைவெளி மார்க்கெட்டில் சிறிய கோவில் ஒன்று உள்ளது. அருகில் உள்ள மக்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வதுண்டு. பொது முடக்கத்தின்போது கோவில் பூட்டப்பட்டிருந்தது. சென்னையில் தற்போது கோவில்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டதால் பூசாரி கோவிலை திறந்து பூஜை செய்து வந்தார்.

ஆனால் கோவிலை ஒட்டி ஒருவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். அங்கேயே சமைத்து அங்கேயே விற்பனை செய்து வருகிறார். அருகில் பிரியாணி கடை இருப்பதால் பூசாரிக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடைக்காரரிடம் கேட்டுள்ளார். ஆனால் நான் வியாபாரம் செய்கிறேன் என்று கூறிவிட்டாராம்.

கடை உரிமையாளரிடம் பேசியபோது, உள்ளே வைத்து சமைக்க சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் கடைக்காரர் உள்ளே வைத்து சமைக்கவில்லை. மீண்டும் உரிமையாளரிடம் சென்று கேட்டேன், அப்போது கோவில் அருகில் வைத்து சமைத்தால் கோவிலை பூட வேண்டியதுதான் என்றார். அதனால் பூட்டி வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News