செய்திகள்
கைது

மாவட்டத்தில் இதுவரை 62 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது- போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்

Published On 2020-08-31 09:39 GMT   |   Update On 2020-08-31 09:39 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 62 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் பராமரிக்கும் வகையில், போதைப்பொருள், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை, ரவுடிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் 24 ரவுடிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதில் 20 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 62 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதில் 54 வழக்குகள் பதிவு செய்து, 56 பேர் கைது செய்யப்பட்டு 3,063 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் 5 நான்கு சக்கர வாகனம் மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியில் சுற்றியவர்கள் மீது இதுவரை 8 ஆயிரத்து 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 3 ஆயிரத்து 540 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News