செய்திகள்
ப.சிதம்பரம்

மோசமான பொருளாதாரம் பற்றி கடவுளின் தூதர் பதில் அளிப்பாரா? -மத்திய நிதி மந்திரிக்கு ப.சிதம்பரம் கேள்வி

Published On 2020-08-29 09:07 GMT   |   Update On 2020-08-29 09:07 GMT
கொரோனாவுக்கு முன்பே, பொருளாதாரம் மோசமானது குறித்து கடவுளின் தூதராக மத்திய நிதி மந்திரி பதில் அளிப்பாரா? என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை:

கொடிய தொற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கொரோனா கடவுளின் செயல் என்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கருத்து கூறியிருந்தார்.

இதை விமர்சித்துள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், பெருந்தொற்று கடவுளின் செயல் என்றால் அதற்கு முன்பே பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்ததை எவ்வாறு விவரிப்பது? இதற்கு கடவுளின் தூதராக நிதி மந்திரி பதில் அளிப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

‘ஜிஎஸ்டி  வருவாய் இழப்பு விவகாரத்தில், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள இரண்டு தேர்வுகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. மீண்டும் ஒட்டுமொத்த நிதிச்சுமையும் மாநிலங்கள் தலையில்தான் விழும். இது முழு துரோகம் என்பதோடு சட்டத்தை  நேரடியாக மீறுவதாகும்’ என ப.சிதம்பரம்  கூறி உள்ளார். 
Tags:    

Similar News