செய்திகள்
கறுப்பர் கூட்டம்

கறுப்பர் கூட்டத்தின் கார்த்திக்கிற்கு நிபந்தனை முன்ஜாமீன்

Published On 2020-08-26 09:54 GMT   |   Update On 2020-08-26 09:54 GMT
கந்த சஷ்டி விவகாரத்தில் கறுப்பர் கூட்டத்தின் கார்த்திக் என்பவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து யூடியூப்பில் பதிவிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன்,  சுரேந்தர், குகன், சோமசுந்தரம் என்பவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளர் கார்த்திக் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

வீடியோவில் பதிவான  காட்சிகள் நீக்கப்பட்டு மன்னிப்பு கோரிய பிறகும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த  வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளர்  கார்த்திக் என்பவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக  உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்து முன்ஜாமீன் வழங்கி உள்ளது.
Tags:    

Similar News