செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

எஸ்.எம்.எஸ். மூலம் கொரோனா பரிசோதனை முடிவுகள்- அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2020-08-26 07:26 GMT   |   Update On 2020-08-26 07:26 GMT
கொரோனா பரிசோதனை முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கும் நடைமுறையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
சென்னை:

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கொரோனா பரிசோதனை முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கும் நடைமுறையை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்காக 2 பேட்டரி கார்களையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கட்டுக்குள்தான் உள்ளது. கொரோனாவை முற்றிலுமாக கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். கொரோனா உயிரிழப்புகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேவைப்பட்டால் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

பாடகர் எஸ்.பி.பி., எம்.பி. வசந்தகுமாரின் உடல்நிலை சீராக உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிகிக்சைக்கு தேவையான வசதிகளை வைத்திருக்க அறிவுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News