செய்திகள்
ஸ்டாலின்

தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் - ஜே.பி.நட்டாவுக்கு ஸ்டாலின் பதில்

Published On 2020-08-24 14:20 GMT   |   Update On 2020-08-24 14:20 GMT
தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது எனவும் தேசிய உணர்வுகளுக்கு எதிரான கட்சியாக திமுக உள்ளது. தேசிய முன்னேற்றத்திற்கு எதிராக இருப்பவர்களுக்கு தமிழக பாஜக பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று பேசியிருந்தார். 

இந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின், தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் என்று கூறியுள்ளார். மேலும், திமுக ஜனநாயக இயக்கம், வளர்ச்சியிலும், தேச உணர்வுகளிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இயக்கம் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News