செய்திகள்
கே.எஸ்.அழகிரி

சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தொடர வேண்டும் - கே.எஸ்.அழகிரி

Published On 2020-08-23 14:54 GMT   |   Update On 2020-08-23 14:54 GMT
சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகத்தொடர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை:

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தையடுத்து ராகுல் காந்தி தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி, கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். 

இந்த நிலையில், சோனியா காந்தி இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தியின் ராஜினாமா ஏற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய காங்கிரஸ் தலைவர் நாளையே தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தி தொடர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கே.எஸ்.அழகிரி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அன்னை சோனியா காந்தி கட்சியின் தலைவராகத்தொடர வேண்டும். கோடிக்கணக்கான இந்திய மக்களும், காங்கிரஸ் கட்சியின் செயல் மறவர்களும் சோனியா, ராகுலை பின் பற்றுகிரார்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News