செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2020-08-23 06:52 GMT   |   Update On 2020-08-23 06:52 GMT
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் உள்மாவட்டங்களான திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான  மழையும்,

சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்)

ஏற்காடு (சேலம்), பாப்பிரெட்டிப்பட்டி தானியங்கி மழைமானி (தர்மபுரி) தலா 8, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகம் (தர்மபுரி), மேட்டூர் (சேலம்) தலா 7, பேரையூர் (மதுரை), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), செட்டிகுளம் (பெரம்பலூர்) தலா 6.  

இன்று முதல் ஆகஸ்ட் 27 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், குஜராத் கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 60 வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News