செய்திகள்
கரூரில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை ஒருவர் ஆர்வமாக வாங்கியதை காணலாம்

விநாயகர் சிலைகளை ஆர்வமாக வாங்கி சென்ற பொதுமக்கள்

Published On 2020-08-22 10:22 GMT   |   Update On 2020-08-22 10:22 GMT
வீடுகளில் வைத்து வழிபட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
கரூர்:

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று பல்வேறு பகுதிகளில் பல அடி உயரத்தில் பல விதமான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள். 3 நாட்கள் வழிபாடு செய்த பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுப்பதற்காக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்த உள்ளனர். இதற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கவும், பூஜை பொருட்களை வாங்கவும் கரூர் கடைவீதிக்கு பொதுமக்கள் ஆர்வமாக வந்தனர்.

நேற்று காலை முதல் ஈஸ்வரன் கோவில் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
Tags:    

Similar News