செய்திகள்
விநாயகர் சிலைகள்

வீட்டில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி- ஐகோர்ட்

Published On 2020-08-21 08:36 GMT   |   Update On 2020-08-21 08:36 GMT
விநாயகர் சதுர்த்திக்காக வீட்டில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
சென்னை:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விநாயகர் சதுத்தி விழாவையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலம் செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் சிலை வைக்கவோ ஊர்வலம் செல்லவோ அனுமதி இல்லை என தீர்ப்பளித்தது.

அதேசமயம், வீட்டில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை தனி நபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம் என அனுமதி அளித்தது.
சென்னையில் விநாயகர் சிலைகளை மெரினா கடற்கரை தவிர்த்து பிற நீர்நிலைகளில் தனிமனித இடைவெளியுடன் கரைக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தது.
Tags:    

Similar News