செய்திகள்
பாஜக மாநில தலைவர் எல் முருகன்

இந்து முன்னணியின் நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும்- முருகன்

Published On 2020-08-20 06:43 GMT   |   Update On 2020-08-20 06:43 GMT
விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணி நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறி உள்ளார்.
சென்னை:

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியதாவது:

தடையை மீறி விநாயகர் சிலைகளை நிறுவுவோம் என இந்து முன்னணி ஏற்கனவே அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணியின் நிலைப்பாடுதான் பாஜகவின் நிலைப்பாடும். இந்து முன்னணி நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும்.

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு அனுமதி தராதது புரியாத புதிராக உள்ளது. டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி தந்த தமிழக அரசு விநாயகர் சிலையை வைக்க அனுமதி மறுப்பது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags:    

Similar News