செய்திகள்
குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

அவினாசி அருகே நூற்பாலையில் 15 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

Published On 2020-08-19 02:02 GMT   |   Update On 2020-08-19 02:02 GMT
அவினாசி அருகே நூற்பாலையில் 15 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு கருவலூர் ராமநாதபுரத்திலுள்ள சங்கர சேவாலயத்திலும், அம்மாபாளையம் மரியாலாயா காப்பகத்திலும் ஒப்படைக்கப்பட்டனர்.
அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலையில் திருநெல்வேலி, தர்மபுரி, கடலூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவிகள் உள்பட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு பணியாற்றி வந்த பெண் ஒருவர், அந்த நூற்பாலையில் வேலைப்பளு அதிகமாக இருப்பதாகவும், விடுமுறை தருவது இல்லை என்றும், உறவினர்களிடம் பேசக்கூடாது என்றும் பல்வேறு வகைகளில் மன அழுத்தத்தை கொடுப்பதாகவும் கூறியதுடன், தன்னை இங்கிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் குழந்தைகள் நல அமைப்புக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.

இதையடுத்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகம், அவினாசி போலீசார் மற்றும் வருவாய்துறையினர், குழந்தைகள் நல அமைப்பினர் அந்த நூற்பாலைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 14 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகள் 15 பேர் பணியில் அமர்த்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தை தொழிலாளர்கள் 15 பேரையும் மீட்டு கருவலூர் ராமநாதபுரத்திலுள்ள சங்கர சேவாலயத்திலும், அம்மாபாளையம் மரியாலாயா காப்பகத்திலும் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News