செய்திகள்
ஆர்ப்பாட்டம்

குமரியில் 5 இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-08-18 09:42 GMT   |   Update On 2020-08-18 09:42 GMT
குமரியில் 5 இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா நெருக்கடியில் பணியாற்றுவதால் சிறப்பூதியம் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.
நாகர்கோவில்:

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தலைவர் ஜோதி தலைமை தாங்கினார். ஸ்ரீகுமார் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு, மரணமடையும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும், குடும்பத்தில் படித்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கொரோனா நெருக்கடி காலத்தில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன போன்ற 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் இசக்கிமுத்து, மால்டன், சுபாஷ் சந்திரபோஸ், தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆரல்வாய்மொழி டாஸ்மாக் கடை முன்பு நடந்த போராட்டத்துக்கு டாஸ்மாக் எஸ்.சி., எஸ்.டி. சங்க மாவட்ட பொறுப்பாளர் முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தொ.மு.ச மாநில துணைச் செயலாளர் இளங்கோ, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் டாஸ்மாக் அரசு ஊழியர் சங்க தலைவர் செந்தில்வேல், விற்பனையாளர் சங்க தலைவர் கண்ணன், சிவதாணு, அய்யப்பன், திருலோக சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News