செய்திகள்
ஆர்ப்பாட்டம்

மானியதஅள்ளியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-08-18 08:09 GMT   |   Update On 2020-08-18 08:09 GMT
டாஸ்மாக் அனைத்து ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நல்லம்பள்ளியை அடுத்த மானியதஅள்ளி டாஸ்மாக் மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நல்லம்பள்ளி:

டாஸ்மாக் அனைத்து ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நல்லம்பள்ளியை அடுத்த மானியதஅள்ளி டாஸ்மாக் மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்டசெயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். சங்க மாநில துணை பொதுச்செயலாளர் சமநீதி, நிர்வாகிகள் மயில்முருகன், முனுசாமி, சுப்ரமணி, கோவிந்தசாமி, கோவிந்தன், கோவிந்தராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 

கொரோனா ஊரடங்கு காலத்தில் பணியின்போது இறந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும். பணி நேரத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி அதியமான்கோட்டையிலும் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News