செய்திகள்
பள்ளி மாணவிகள்

பிளஸ்-2 தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

Published On 2020-08-18 02:33 GMT   |   Update On 2020-08-18 02:33 GMT
பிளஸ்-2 தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பிளஸ்-2 பொதுத்தேர்வு, மறுதேர்வு மற்றும் பிளஸ்-1 அரியர் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று ‘ Notification ’ பக்கத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.

விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பினால், அதே இணையதள முகவரியில் Application for Retotalling/ Revaluation என்ற தலைப்பை கிளிக் செய்து வெற்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும். இந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 2 நகல்கள் எடுத்து, வருகிற 21-ந்தேதி காலை 10 மணி முதல் 25-ந்தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News