செய்திகள்
போடியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ஒரு காரில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த காட்சி.

சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2020-08-15 10:12 GMT   |   Update On 2020-08-15 10:12 GMT
சுதந்திர தின விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
தேனி:

நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தேனி மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில் அணைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை ஆகிய அணைகளிலும், தேனி, போடி உள்பட மாவட்டம் முழுவதும் நகர் பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும், முக்கிய இடங்களிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மெட்டல் டிடெக்டர் மற்றும் வெடிகுண்டுகள் கண்டறியும் நவீன கருவிகளுடன் வெடிகுண்டுகள் கண்டறியும் சோதனை நடத்தினர்.

சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. நகர் பகுதிகளிலும் திடீர் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் சுதந்திர தின விழா பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா நடைபெறும் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நேற்று இந்த விளையாட்டு அரங்கிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 
Tags:    

Similar News