செய்திகள்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

கந்து வட்டி கும்பலை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

Published On 2020-08-14 11:42 GMT   |   Update On 2020-08-14 11:48 GMT
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர்.
கரூர்:

கரூர் கலெக்டர் அலுவலகத்தில்  இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி கடன் வட்டி வசூலிக்கும் தனியார் நிறுவனங்களின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும், தேசிய ஊரக வேலை திட்டத்தில் 200 நாட்கள் வேலை நாள் கூலியை ரூ.500 ஆக உயர்த்தி வழங்கி பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகள் நகர்ப்புற சுய உதவி குழுக்கள் மூலம் நுண் கடன் வழங்க வேண்டும், கந்து வட்டிக்கு கடன் கொடுக்கும் கும்பலை கைது செய்ய வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதில், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News